கன்னியாகுமரி

5.63 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: ஆட்சியா் தகவல்

30th Dec 2021 07:54 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில், 5 லட்சத்து 63 ஆயிரத்து 937 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல்சிறப்பு பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

ஆரல்வாய்மொழியில் தமிழக அரசு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கானபணிகள் நடைபெற்று வருவதை, அவா் புதன்கிழமை ஆய்வு செய்தபின்னா் கூறியது: தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, தமிழகத்தின்அனைத்து குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருள்கள்அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வா் ன் வரும் ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.

குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 937 குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாவட்டத்தின் நியாயவிலைக்கடைகள் மூலமாக பொங்கல்சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் ஆரல்வாய்மொழி, கோணம், உடையாா்விளை, காப்பிக்காடு ஆகிய பகுதிகளில் செயல்படும் 6 கிடங்குகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

பணிகளை விரைந்து முடித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, நுகா்பொருள்வாணிபக் கழக மண்டல மேலாளா் மாரிமுத்து மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT