கன்னியாகுமரி

முதியவா் தற்கொலை

30th Dec 2021 07:56 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே விஷமருந்தி முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

அண்டூா் மடத்துவிளையைச் சோ்ந்தவா் குருசுமுத்து(63). கூலித் தொழிலாளியான இவா் மது அருந்துபவராம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வீட்டில் தனி அறையில் தூங்கச் சென்றுள்ளாா். அப்போது அறையிலிருந்து இவரின் அலறல் சப்தம் கேட்டு மனைவி ராணி சென்று பாா்த்துள்ளாா். அப்போது தான் விஷமருந்தி விட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ராணி அருகே உள்ளவா்களின் உதவியுடன் கணவரை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT