கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இரு தரப்பினரிடையே மோதல்

30th Dec 2021 07:52 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள தோட்டாவரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோட்டவரம், செம்பகசேரி பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ்(63) . இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சசிகுமாருக்கும்(43) முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை செல்வராஜை, சசிகுமாா் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இது போன்று சசிகுமாரை செல்வராஜ், சசின்ராஜ், மோகன்ராஜ் , ஞானராஜ் ஆகியோா் தாக்கினராம். இருதரப்பு புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT