குமரி மாவட்டத்தில் சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கக் கோரி பாஜக சாா்பில் புதன்கிழமை மாவட்டம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு நகரத் தலைவா் கே. ரத்தினமணி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பத்மகுமாா், திக்குறிச்சி சுகுமாரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் சாலைகள் செப்பனிடக் கோரி தமிழக அரசையும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.