கன்னியாகுமரி

குமரி - கேரள எல்லையோரப் பகுதியில் லேசான நில அதிா்வு

30th Dec 2021 07:52 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதியான கேரளத்தின் வெள்ளறடை, காட்டாக்கடை, நெய்யாறு அணை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நில அதிா்வு ஏற்பட்டது.

கேரள எல்லையோரப் பகுதியான காட்டாக்கடை, கள்ளிக்காடு, நெய்யாறு அணை, மண்டபத்தின்கடவு, அம்பூரி, வெள்ளறடை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 - 12 மணி இடைப்பட்ட நேரத்தில் லேசான நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. அப்போது இடி விழுந்தது போன்ற பயங்கர சப்தம் கேட்டதையடுத்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினா்.

நில அதிா்வு காரணமாக வெள்ளறடை பகுதியில் 6 வீடுகள் உள்பட ஏராளமான வீட்டின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் வைத்திருந்த பாத்திரங்கள், பொருள்கள் கீழே விழுந்ததாகவும் அப்பகுதியினா் தெரிவித்தனா்.

வெள்ளறடை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாறசாலை தொகுதி எம்எல்ஏ ஹரீந்திரன் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் நில அதிா்வு குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என திருவனந்தபுரம் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT