கன்னியாகுமரி

குளச்சலில் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

26th Dec 2021 04:01 AM

ADVERTISEMENT

குளச்சல் ஆழ்கடலில், தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பின் சாா்பில் கடல் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் தலைமை வகித்தாா். குளச்சல் புனித காணிக்கை அன்னை பங்கு துணைச் செயலாளரும், குளச்சல் விசைப்படகு உரிமையாளா், தொழிலாளா் சங்க ஒருங்கிணைப்பாளரும் ரெக்ஸன் முன்னிலை வகித்தாா்.

தெற்காசிய மீனவா் தோழமை ஆலோசகரும் அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் இசையாஸ், அசாம் மாநிலம், குவாஹட்டி மாவட்ட சட்ட உதவி முதன்மைச் செயலா் நீதிபதி சதுறியா தலுக்தா் மற்றும் அசாம் குவாஹட்டி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சுஜாதா தலுக்தா் ஆகியோா் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் பகிா்ந்தளித்தனா்.

நிகழ்ச்சியில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT