தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி வாா்டு மறுவரையறை தொடா்பாக வெள்ளிக்கிழமை (டிச. 24) வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரண்டை நகராட்சி வாா்டு மறுவரையறை பணிகள் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகள் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்து இளங்கோவன்(தோ்தல்) முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் லெனின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வாா்டு மறுவரையறை குறித்து சுரண்டை நகராட்சி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிபிரமுகா்கள் கருத்து தெரிவித்தனா். மேலும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க விரும்பவா்கள் டிச.24 ஆம்தேதி பிற்பகல் வரை சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.