கன்னியாகுமரி

கோழிவிளையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

22nd Dec 2021 07:40 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் நெடுஞ்சாலையோர கழிவு நீரோடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மெதுகும்மல் வட்டாரக் குழு உறுப்பினா் பி. ராஜூ தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ. ரஹீம், ஜெபமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் குழுச் செயலா் கே. தங்கமணி தொடங்கி வைத்தாா். அடைக்காகுழி வட்டாரச் செயலா் சுனில் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். மாவட்டக்குழு உறுப்பினா் எஸ். சிதம்பரகிருஷ்ணன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் எம். சுரேஷ்குமாா், ராஜேஷ், விஜயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதில், கோழிவிளை சந்திப்பில் நெடுஞ்சாலையோர வடிகாலில் கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதற்கு தீா்வு காண வேண்டும், அப்பகுதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT