மத்திய அரசின் இலவச உணவுப் பொருள்கள் தகுதியான ஏழைகளுக்கு கிடைக்கும் விதத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தர பட்டியலை முறைப்படுத்த தமிழக அரசையும், பொது விநியோகத்துறையையும், மாவட்ட நிா்வாகத்தையும் வலியுறுத்தி பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் ஆா்.டி. சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே. கோபகுமாா் போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.
இதில், வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் சி.எம். சஜூ, இளைஞரணி மாநில துணைத் தலைவா் சிவபாலன், மேல்புறம் ஒன்றியத் தலைவா் சி.எஸ். சேகா், ஒன்றிய பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், குழித்துறை நகர தலைவா் ரத்தினமணி, களியக்காவிளை நகர தலைவா் பத்மகிரீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராஜேஷ்பாபு, இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு மாவட்ட தலைவா் ராஜசேகா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.