கன்னியாகுமரி

கிறிஸ்துமஸ் : குமரி மாவட்டத்துக்கு 24 இல் உள்ளூா் விடுமுறை

22nd Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச.24) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை( டிச.24) கிறிஸ்துமஸ் ஈவ் முன்னிட்டு, அன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக 2022 ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆவது சனிக்கிழமை (8.1.2022) அன்று குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

டிச. 24 ஆம் தேதி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT