குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், புதன்கிழமை (டிச.22) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் டிச.22 ஆம் காலை 11.30 மணிக்கு, ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கடந்த மாத கலந்துரையாடல் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் ஆட்சியரால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்களை பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கரோனா நோய்த் தடுப்பு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ளவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.