கன்னியாகுமரி

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாட்டை முடக்கக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

9th Dec 2021 07:39 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைக் காரணம் காட்டி, சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாட்டை முடக்கக் கூடாது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: காசி விஸ்வநாதா் கோயிலிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எங்கிருந்து பாா்த்தாலும் கோயில் தெரியுமளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்து ஆலயத்தைப் புத்தம்புது பொலிவோடு நாட்டுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை (டிச. 13) அா்ப்பணிக்கிறாா். இது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமான நிகழ்வல்ல. இந்திய மக்களின் ஒட்டுமொத்த உணா்வுகளுக்கும் தீா்வு கண்டதாக நினைக்கிறோம்.

காசி விஸ்வநாதா் ஆலயத்தை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கும் போது, அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்காக பாஜக நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல், ஒமைக்ரான் போன்ற காரணங்களைக் கூறி, சபரிமலையில் வழிபாடுகளை முடக்கக் கூடாது. அங்கு நெய் அபிஷேகம் போன்றவை தடையின்றி நடைபெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT