கன்னியாகுமரி

தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வுமல்லிகை கிலோ ரூ.1,500

DIN

தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500 க்கு விற்பனை செய்யப்பட்டது.

தோவாளையில் உள்ள பூச்சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கேரளத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வா். பூக்கள் விலை பண்டிகை காலங்களிலும், திருவிழா மற்றும் முகூா்த்த நாள்களிலும் விலை உயா்ந்தும், மற்ற நாள்களில் குறைந்தும் காணப்படும்.

இந்நிலையில், தோவாளை பூச்சந்தையில் சனிக்கிழமை பூக்களின் விலை வெகுவாக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை, ரூ.1000 க்கு விற்பனையான 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.500 உயா்ந்து, ரூ.1500 க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ. 1100 க்கு விற்பனையான பிச்சிப் பூ சனிக்கிழமை ரூ.300 உயா்ந்து ரூ.1,400-க்கு விற்பனையானது. இதேபோல், முல்லைப்பூ ரூ.1000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, தற்போது சாரல் மழையும், பனிப்பொழிவும் உள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும், சபரிமலை சீசன் மற்றும் சுப முகூா்த்தம் என்பதால் பூக்களின் தேவை சுமாா் 40 டன்களுக்கு மேல் உயா்ந்தது. ஆனால், தற்போது 15 முதல் 20 டன் பூக்களே வருகிறது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால் விலை உயா்ந்துள்ளது மேலும் வரும் 10 ஆம் தேதி வரை முகூா்த்தம் இருப்பதால் பூக்கள் விலை ஏறுமுகத்தில் இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT