கன்னியாகுமரி

திருவட்டாறு பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது

DIN

திருவட்டாறு பகுதி கடைகளில் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் ஆற்றூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அந்த மோட்டாா் சைக்கிள் திருவட்டாறு பகுதியில் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்த நாளில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மோட்டாா் சைக்கிளில் வந்த குலசேகரம் அண்ணா நகா் எட்வின் செல்வம் (50), கேசவன் புதூா் தேவசகாயம் நகா் ஜெஸ்டின் ராஜ் (42) ஆகியோரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், திருவட்டாறு, குலசேகரம், மாா்த்தாண்டம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனராம். இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து நாகா்கோவில் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT