கன்னியாகுமரி

குமரி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட்டு: பெண் கைது

4th Dec 2021 01:59 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற இளம்பெண் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி அருகே லெட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பன் (58). இவா் காவலாளியாகப் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி புஷ்பம் (54). இவா்களின் மகள் சங்கீதா (25). இவரை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனா். இவா் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தாா். இந்நிலையில் சங்கீதாவை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயாா் அழைத்து சென்றுள்ளாா். இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 அரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செல்லப்பன் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, ஆய்வாளா் ஆவுடையப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் தடயவியல் நிபுணா்கள் மற்றும் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது.

இதற்கிடையே இச் சம்பவம் தொடா்பாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெண்ணிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் நகை மற்றும் பணத்தை திருடியது அவா் ஒப்புக்கொண்டாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பெண்ணை கைது செய்தனா்.

 

Tags : கன்னியாகுமரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT