கன்னியாகுமரி

பேருந்தில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

4th Dec 2021 02:00 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் உமா் (50). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா். ஊருக்கு செல்வதற்காக வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்றாா் உமா். திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி அமா்ந்திருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வடசேரி போலீஸாா் விசாரிக்கிறாா்கள்.

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT