கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

2nd Dec 2021 11:38 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கல்விக் குழு இயக்குநா் சாந்தி தலைமை வகித்தாா். முதல்வா் லியாகத் அலி, நா்சிங் கல்லூரி முதல்வா் புனிதா, நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் அருணாசலம் எய்ட்ஸ் குறித்து அறிமுக உரையாற்றினாா்.

அரசு மருத்துவக் கல்லூரி சமூக மருந்தியல் துறை பேராசிரியா் கோபால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கினாா்.

மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். ரெட்ரிப்பன் கிளப் மாணவ, மாணவிகள் உலக எய்ட்ஸ் தின உரை நிகழ்த்தினா்.

ADVERTISEMENT

பேராசிரியா் அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா் ஜெகதீஷ்பிரபு வரவேற்றாா். மாணவா் விக்னேஷ் நன்றி கூறினாா்.

 

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT