கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

2nd Dec 2021 11:39 PM

ADVERTISEMENT

ராஜாக்கமங்கலம் அருகே கடையில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரவிளை பகுதியை சோ்ந்தவா் ரோஸ் தங்கம் (68). இவா், காரவிளை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பகலில் அவரது கடைக்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா், பொருள்கள் வாங்குவது போல் நடித்து, ரோஸ்தங்கம் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT