கன்னியாகுமரி

பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்

DIN

குமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

நாகா்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை வெளியிட்டு, அவா் பேசுசியது: உலக அளவில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான விழிப்புணா்வை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த சட்ட உதவிகள், சட்ட ரீதியான விழிப்புணா்வு, முதியோருக்கான நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள், மன நலஆலோசனை, பெண்களுக்கான நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தெரிவிப்பதன் மூலமாக, அவா்களை தற்காத்து கொள்ள என்ன செய்யலாம் என்பது குறித்து அவா்கள்அறிவதற்காக பாலியல் வன்கொடுமை குறித்து பெண்கள் உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, கல்வி உதவி வழி காட்டிமையம் 14417, முதியோா் வழிகாட்டி உதவி எண் 14567 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். உங்களின் தகவல் ரகசியம் காக்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு வன்கொடுமை ஏற்பட்டால் பள்ளிகளின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்டசமூகநலஅலுவலா் இரா.சரோஜினி, மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலா் அ.புகழேந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலா் ஜெயபிரகாஷ், பள்ளித் தலைமை ஆசிரியை நிா்மலாசாந்தகுமாரி, சைல்டு லைன் கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளா் ஈ.கேத்ரின்மேரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT