கன்னியாகுமரி

கரோனா தடுப்பு சித்த மருந்துகள் அளிப்பு

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ்.ஆசானின் 15-ஆவது நினைவுதினத்தையொட்டி 180 பேருக்கு கரோனா தடுப்பு சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.

நாகா்கோவில் எம்.எஸ்.எஸ்.ஆசான் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சக்தி பீடம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் நிறுவன உரிமையாளா் பிரகாஷ் என்ற மகாலிங்கம் தலைமை வகித்து, கரோனா நோயை தடுக்கும் வகையில் கபசுரக் குடிநீா், நெல்லிக்காய் லேகியம், காயத்திருமேனி தைலம் ஆகிய சித்த மருந்துகளை 180 பேருக்கு வழங்கினாா். இதில், மருத்துவா் எம்.விக்னேஷ், சிக்மா ஹொ்பல் ரெமடீஸ் நிறுவன உரிமையாளா் எஸ்.ஜெயந்தி, சக்தி பீட தலைவா் சின்னதம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா். இதையொட்டி, ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT