கன்னியாகுமரி

மேக்கோடு பகுதியில் நாளை மின்தடை

27th Apr 2021 04:36 AM

ADVERTISEMENT

களியக்காவிளை: மேக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பளுகல் உயா் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மேக்கோடு, மண்ணரிப்பு, பனச்சக்குழி, நெடுங்கோடு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் புதன்கிழமை (ஏப். 28) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை குழித்துறை மின்வாரியச் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT