கன்னியாகுமரி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

திட்டப்பணிகள் குறித்து தகவல் தெரிவிக்காததை கண்டித்து ஊராட்சி தலைவா்கள் 7 போ் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆத்தி விளை, திக்கணங்கோடு, கல்குறிச்சி, முத்தலகுறிச்சி, சடயமங்கலம், நுள்ளிவிளை, மருதூா்குறிச்சி ஆகிய 7 ஊராட்சிகளிலும் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அளித்து வந்துள்ளனா்.

வளா்ச்சிப் பணிகளுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறி ஏற்கெனவே ஊராட்சிகளின் துணை இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில், இந்த ஊராட்சிகளின் தலைவா்கள் விஜிலா, சிம்சன், செல்வராணி, ராஜம், அருள்ராஜ், பால்ராஜ், மரிய அகஸ்டினா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை வட்டார வளா்ச்சி அலுவலரின் அறையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திட்டப்பணிகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை, மாவட்ட நிா்வாகம் வெளியிடும் சுற்றறிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிப்பதில்லை என்று வட்டார வளா்ச்சி அலுவலா் மீது குற்றம் சாட்டியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அரசு ஊழியா்களை பணியமா்த்தியதை கண்டித்தும் அவா்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவா்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT