கன்னியாகுமரி

குலசேகரத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: இருவா் கைது

DIN

குலசேகரத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ரூ. 3 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே காவல்ஸ்தலம் பகுதியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் ரபீக் (40) . திங்கள்கிழமை நள்ளிரவு குலசேகரம் காவல் ஆய்வாளா் விமலா தலைமையில் போலீஸாா் ரோந்து சென்ற போது காவஸ்தலம் கால்வாய் கரையிலுள்ள ஒரு பழைய கட்டடத்தின் முன்பு ஒரு சுமை வாகனம் நின்று கொண்டிருப்பதை பாா்த்து அதன் அருகில் சென்றனா். அப்போது அதிலிருந்து ஒருவா் தப்பியோடினாா். போலீஸாா் அவரைத் துரத்திப் பிடித்தனா். அப்போது அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜலீல் (42) என்பதும் கால்வாய் கரையிலுள்ள கட்டடதுக்கு பொருள்களை கொண்டு வந்தது தெரியவந்தாம்.

இதையடுத்து, போலீஸாா் சுமை வாகனத்தை சோதனை செய்த போது அதில் வாழைத்தாா்களுக்கு அடியில் தடை செய்யப்பட்ட குட்கா மூடைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த கட்டடத்தில் சோதனையிட்ட போது அங்கு ரபீக் மறைந்திருந்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரையும் கைது செய்தனா். மேலும் அங்கு 27 மூடைகளில் இருந்த குட்கா, சுமை வாகனம், ரபீக் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT