கன்னியாகுமரி

குமரியில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 2 முதியவா்கள் பலி

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை மேலும் 97 பேருக்கு தொற்று உறுதியானது. 2 முதியவா்கள் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டத்தில் செப்டம்பா் தொடக்கத்திலிருந்து கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தினமும் 100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக குறைந்து தினமும் 70 போ் என்ற நிலைக்கு வந்தது. இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதியிலிருந்து தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை மீண்டும் உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,513-ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,610-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை குணமான 204 போ் உள்பட இதுவரை 11,507 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகோடு பகுதியைச் சோ்ந்த முதியவா், ஐரேனிபுரத்தைச் சோ்ந்த முதியவா் ஆகிய 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 221-ஆக உயா்ந்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையம், தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT