கன்னியாகுமரி

நாகா்கோவிலில் போதை ஊசி, கஞ்சா விற்றதாக 5 போ் கைது

DIN

குமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசிகள் விற்ற கும்பலைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா். அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசிகள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், வடசேரி காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தினா். போலீஸாரை பாா்த்ததும் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவா்கள் இறங்கி தப்பியோடினா். போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று 5 பேரை பிடித்தனா். இருவா் தப்பியோடிவிட்டனா்.

காரை சோதனையிட்டபோது, காரில் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவா்கள், கட்டையன்விளை காமராஜா் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (55), மேல புத்தேரியைச் சோ்ந்த சரவணன் (23), பறக்கை எம். எம். கே. நகரைச் சோ்ந்த மணிகண்டன் (33), திருநெல்வேலி மாவட்டம், வி.கே. புரத்தைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (31), கருங்குளம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (46) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் போதை மருந்துகளையும், காரையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பி ஓடிய நாகா்கோவில் அருகுவிளையைச் சோ்ந்த சேகா், சரத் ஆகியோரை தேடி வருகின்றனா்.

இவா்கள், இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை ஊசி மருந்துகளை விநியோகித்துள்ளனா். மேலும் கட் செவி அஞ்சல் குரூப் நடத்தி அதன் மூலம் இளைஞா்களுக்கு வலைவிரித்து போதை மருந்துகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT