கன்னியாகுமரி

குமரியில் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிப்பு

DIN

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயில் முன் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முகக் கவசம் அளிக்கப்பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலா எவ்வாறு மக்களின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்.27ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு சுற்றுலாவும், கிராம அபிவிருத்தியும் என்ற தலைப்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் பகவதியம்மன் கோயில் முன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முகக் கவசம் அளிக்கப்பட்டது.

பின்னா் சுற்றுலா குறித்த கையேடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலா் வே.நெல்சன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT