கன்னியாகுமரி

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் 28இல் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை (செப்.28) ஆா்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

குமரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலா் மகேஷ் முன்னிலை வகித்தாா்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகா்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும், திங்கள்கிழமை (செப்.28) காலை 10 மணிக்கு நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் அனைத்து ஒன்றியங்கள், பேரூா்களிலும் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ஆஸ்டின் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

குமரி மேற்கு மாவட்டம்: குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜேஷ் குமாா் எம்எல்ஏ மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வெளியிட்ட கூட்டறிக்கை: குமரி மேற்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில், மேல்புறம், அழகியமண்டபம் ஐஓபி வங்கிக் கிளைகள், குலசேகரம் பி.எஸ்.என்.எல் அலுவலகம், அருமனை, கொல்லங்கோடு, புதுக்கடை, கருங்கல், காஞ்சிரகோடு, குழித்துறை, திருவட்டாறு, தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

SCROLL FOR NEXT