கன்னியாகுமரி

வேளாண் மசோதாவை கண்டித்து மறியல்: மாா்த்தாண்டத்தில் விவசாயிகள் 86 போ் கைது

DIN

களியக்காவிளை, செப். 25: வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 86 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேளாண் உற்பத்தி பொருள்கள் விற்பனை மசோதா, விவசாய விளைப் பொருள்கள் விலை உறுதி மற்றும் பாதுகாப்பு மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை அண்மையில் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும், சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, ஆதரவு அளித்த தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெ. சைமன் சைலஸ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தொடங்கி வைத்தாா்.

மறியலில் ஈடுபட்ட அகில இந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ஆா். லீமாரோஸ், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மலவிளை பாசி, சிஐடியூ மாவட்டத் தலைவா் சி. சிங்காரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரச் செயலா் வீ. அனந்தசேகா், நல்லூா் வட்டாரச் செயலா் எப். ஜாண், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினா் டி. வின்சென்ட், மாவட்ட துணைச் செயலா் எஸ். சுரேஷ்குமாா், டிஒய்எப்ஐ மாவட்டப் பொருளாளா் வி. ரெதீஷ், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் டெல்பின் மற்றும் 11 பெண்கள் உள்பட 86 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT