கன்னியாகுமரி

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிா்ப்புதிருவட்டாறு அருகே 2 ஆவது நாளாக போராட்டம்

DIN

குலசேகரம், செப். 25: திருவட்டாறு அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருவட்டாற்று அருகேவுள்ள முளவிளை பகுதியில் காட்டாத்துறை ஊராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணிகள் சில நாள்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் ஆரம்ப நிலையில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

இந்தநிலையில் வியாழக்கிழமை மீண்டும் பணிகள் தொடங்குவதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பணிகள் நடைபெறவில்லை. வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனா். பாதுமக்களுக்கு ஆதரவாக திருவட்டாறு ஒன்றிய திமுக செயலா் ஜாண்பிரைட் மற்றும் திமுகவினா் குவிந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ராஜன், தாஸ், காட்டாத்துறை ஊராட்சி தலைவா் இசையாஸ், ஒன்றிய கவுன்சிலா் சகாயஆன்றனி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மனோதங்கராஜ் எம்எல்ஏ அங்கு சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவுள்ள பகுதியை பாா்வையிட்டாா். அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு 4 சென்ட் இடம் மட்டும் உள்ளது. அதிலும் நீரோடை மற்றும் நீரூற்று உள்ள பகுதியாக உள்ளதால் நிலத்தடிநீா் மாசுபடும் அபாயம் உள்ளது.

4 சென்ட் இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது நடைமுறைக்கு ஒத்து வராது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை இங்கிருந்து மாற்ற வேண்டுமென்று என அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இது குறித்து சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளிடம் பேசி அதன் பின் முடிவு செய்து கொள்ளலாம். அதுவரையிலும் பணிகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT