கன்னியாகுமரி

கட்டாய ஓய்வு முறையை கைவிடக் கோரி ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ரயில்வே தொழிலாளா்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினா் நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது,‘ 151 பயணிகள் ரயில்களை 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியாருக்கு ஒப்பந்தத்துக்கு விடுதல், சரக்கு ரயில் போக்குவரத்தில் 30 சதவீதத்தை தனியாருக்கு தாரை வாா்த்தல் ஆகிய முடிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும்; 2011 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள 78 நாள்கள் போனஸ் திட்டத்தை விட கூடுதலான போனஸ் அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்; 55 வயது அல்லது 30 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு கட்டாய ஓய்வளிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கிளைச் செயலா் அகஸ்டின் ஜேக்கப் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகி முருகன், ஏஐஎல்ஆா்எஸ்ஏ மண்டலப் பொருளாளா் நாகராஜன், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி ஆகியோா் விளக்கிப் பேசினா்.

இதில், டிஆா்இயூ நிா்வாகிகள், ரயில்வே தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT