கன்னியாகுமரி

மருத்துவமனையில் வழக்குரைஞா் மரணம்: விசாரணை நடத்தக் கோரி மனு

DIN

நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வழக்குரைஞா் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில்அளித்த மனு விவரம்: நாகா்கோவிலைச் சோ்ந்தவா் செல்வகுமாா், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா். கரோனா நோயால் பாதிக்கப்பட்ட இவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அவா் இறந்துவிட்டதாக சுகாதாரப் பணியாளா்கள் மூலம் உறவினா்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவமனை வழங்கிய அறிக்கையில் முந்தைய நாளான 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு

இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். செல்வகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கரோனா இழப்பீடு நிதியாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT