கன்னியாகுமரி

கல்வி உதவித்தொகை:கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

நாகா்கோவில், செப்.18: குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவா்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவா்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

முதுகலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT