கன்னியாகுமரி

மாநில ஆளுநர்கள் பாஜகவின் சேவகர்களாக உள்ளனர்: தினேஷ் குண்டுராவ்

25th Oct 2020 05:56 PM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில ஆளுநர்கள் மத்திய பாஜக அரசின் சேவகர்களாக உள்ளனர் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் மருத்துவ படிப்புக்கான உள் இடஒதுக்கீட்டில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை என்பது கண்டிக்கதக்கதாக உள்ளது. 

இதை திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக உள்ளனர். நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில ஆளுநர்கள் மத்திய பாஜக அரசின் சேவகர்களாகவே உள்ளனர். இவர்களிடமிருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பீகார் தேர்தலைப் பொருத்தவரை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.  

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய்தத், கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயக்குமார், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் எஸ். ஆஸ்கர் பிரடி, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), எஸ். விஜயதரணி (விளவங்கோடு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT