கன்னியாகுமரி

பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு பயணிகள் ரயில் இன்றுமுதல் இயக்கம்

DIN

கன்னியாகுமரியிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விழாக்கால தினசரி சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு - கன்னியாகுமரி இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ரயிலாக விழாக்கால சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் இயக்கப்படுகிறது.

அதன்படி ரயில் எண் 06526 சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் நவ. 30ஆம் தேதி வரை தினசரி இரவு 8 மணிக்கு புறப்படும்.

மறுமாா்க்கத்தில் ரயில் எண் 06525 சிறப்பு ரயில் அக். 25ஆம் தேதி முதல் டிச. 2ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT