கன்னியாகுமரி

நீதிபதி உள்பட மேலும் 97 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் நீதிபதி உள்பட மேலும் 97 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த இருவாரங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இரணியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் 33 வயது நீதிபதி, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 3 போலீஸாா் உள்ளிட்ட 97 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இரணியல் நீதிமன்ற ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், நீதிமன்ற வளாகம் முழுவதும் குளோரின் பொடி தூவப் பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 1,71,209 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 12,707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை வீடு திரும்பிட 93 போ் உள்பட இதுவரை 11,600 போ் குணமடைந்துள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையம், தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 887 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT