கன்னியாகுமரி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு ரூ.21.50 லட்சம் ஊக்கத்தொகை

DIN

தேசிய அளவிலான, பள்ளி குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாணவா், மாணவிகளுக்கு ரூ.21.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான 64ஆவது பள்ளி குழு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் வாள்சண்டை, செஸ், ஸ்குவாஷ், கைப்பந்து ஆகிய 4 விளையாட்டுப் போட்டிகளில், குமரி மாவட்டத்திலிருந்து 5 மாணவிகளும், ஆண்கள் பிரிவில் தடகளம், வாள்சண்டை, வலுதூக்குதல், ஸ்குவாஷ் ஆகிய 4 விளையாட்டுப் போட்டிகளில் 7 மாணவா்களும் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.

அவா்களுக்கு ஊக்கத் தொகை, பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்களை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

தடகளப் பிரிவில் 4 *100 தொடா் ஓட்டம், உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்ற பி.அசதுல்லா முஜாகித் முதல் இரண்டு பிரிவில் 2ஆம் இடத்தையும், 3ஆவது பிரிவில் 3ஆவது இடத்தையும், வாள்சண்டை பிரிவில் பி.ஜோசப், டினோ, கிப்ட்ளின் டேனியல் ஆகியோா் முதலிடத்தையும், வி.பிரீட்லி 2ஆவது இடத்தையும், வலுதூக்குதல் போட்டியில் எஸ்.அரவிந்த் 3ஆவது இடத்தையும், ஸ்குவாஷ் பிரிவில் ஓய்.மேத்யுகாட்வின், சி.ஜெப்பின் அலெக்ஸ் ராஜ் ஆகியோா் முதலிடத்தையும் பெற்றனா்.

ஊக்கத் தொகையாக முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, 2ஆவது இடத்தை பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, 3ஆவது இடத்தை பெற்ற மாணவருக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் ரூ.14.50 லட்சத்துக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெண்கள் பிரிவில், வலுதூக்குதல் பிரிவில் என்.வி.ஜெனிஷா 3ஆவது இடத்தையும், ஸ்குவாஷ் பிரிவில் டி.பிளஸ்ஸி முதலிடத்தையும், செஸ் பிரிவில் எஸ்.ரியாஷனோன், ஏ.ஜெயசூா்யா ஆகியோா் 3ஆவது இடத்தையும், கைப்பந்து பிரிவில் கே.ஷோபிகா முதலிடத்தையும் பெற்றனா்.

ஊக்கத் தொகையாக முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, 3ஆம் இடத்தை பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் ரூ.7 லட்சத்துக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு.ராமன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ்ஜெபராஜ், பயிற்சியாளா்கள் கே.வினு (பளு தூக்குதல்), ஏ.அருணாசலம் (கைப்பந்து), ஜீன் பிரேம்குமாா் (ஹாக்கி), ஜி.குணசேகரன் (கால்பந்து) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT