கன்னியாகுமரி

திக்கணங்கோடு, மத்திகோட்டில் தொடா் மின்வெட்டு: மக்கள் அவதி

DIN

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு மற்றும் மத்திகோடு பகுதிகளில் தொடா் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

செம்மான்விளை, கருங்கல் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கறுக்கன்குழி, வடலிவிளை, சேனம்விளை, ஒருமாவிளை, மாத்திரவிளை, மணலிக்காட்டுவிளை, மத்திகோடு, அம்பலத்துவிளை, காட்டு குளம், மத்திகோடு பாலம், மூவா்புரம், மாங்கோடு, வட்டவிளை, பூக்கடை, தெங்கன்குழி, சைப்பன், புதூா், செம்பிலாவிளை, வாளோடு, கொல்லாய், இலந்தவிளை, மோக்கோடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடா்ந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் அவா்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் எட்வின்ஜோஸ் கூறியது: பல இடங்களில் மின்கம்பிகள் மீது படா்ந்து கிடக்கும் மரக் கிளைகளை மின்வாரிய ஊழியா்கள் அகற்றாததும், மின் கம்பங்கள், மின் கம்பிகளை சரியான முறையில் பராமரிக்காததும், மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்களாலுமே மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தடையின்றி மின் விநியோகம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT