கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த பொதுப்பணித் துறை பணிக்கு என ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட கேரள பதிவெண் கொண்ட மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டினா். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். அதிகாரிகள் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று எட்டணி பகுதியில் மினி டெம்போவை மடக்கிப் பிடித்தனா். அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

தொடா்ந்து வாகனத்தை சோதனையிட்டதில் அதில் 2.5 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT