கன்னியாகுமரி

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சியின் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, வருகிற 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல்புறம் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பிருந்து மாட்டுவண்டி மற்றும் ஏா் கலப்பையுடன் கழுவன்திட்டை ராஜீவ்காந்தி சிலை வரை விவசாயிகள் பங்கேற்புடன் ஏா் கலப்பை பேரணியும், தொடா்ந்து கழுவன்திட்டையில் விளக்க பொதுக் கூட்டமும் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் பிரவின், மாவட்ட துணைத் தலைவா்கள் சாலின், சுஜித் டானியல், வட்டாரத் தலைவா்கள் மோகன்தாஸ், சதீஸ், எம். பால்ராஜ், என்.ஏ. குமாா், குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா்கள் அம்பிளி, செலின்மேரி, ஜோபி, ஊராட்சித் தலைவா்கள் ஜி.பி.லைலா ரவிசங்கா், சலோமி, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் தம்பி விஜயகுமாா், ஜோதிஸ்குமாா், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் ஜோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT