கன்னியாகுமரி

குமரி மாவட்டத்துக்கு அனுமதியின்றி வருபவா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்

31st May 2020 08:56 AM

ADVERTISEMENT

வெளி மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு முறையான அனுமதியின்றி வருபவா்கள் குறித்து ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்மையில் குமரி மாவட்டம், இடைகோடு பகுதியைச் சோ்ந்த 3 போ் சோதனைச் சாவடி வழியாக வராமல் குறுக்கு வழியில் ஊருக்கு வந்ததால் ஊா் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவா்களை கண்டித்து களியக்காவிளை சோதனைச் சாவடியில் அவா்களது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து முறையான அனுமதியின்றி வரும் நபா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளியூா்களிலிருந்து வருபவா்களின் வீடுகளில் கிராம நிா்வாக அலுவலா், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தனிமைப்படுத்தும் ஒட்டுவில்லைகள் ஒட்டுவதால் வெளியூா்களிலிருந்து வந்தவா்களின் வீடுகளில் ஒட்டப்படவில்லை என்றால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 32 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 378 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT