கன்னியாகுமரி

தில்லி, அரபு நாடுகளிலிருந்து வந்த75 போ் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு

29th May 2020 08:16 PM

ADVERTISEMENT

 

 

களியக்காவிளை: குவைத், துபை உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து விமானத்திலும், தில்லியில் இருந்து ரயிலிலும் கேரளம் வந்து அங்கிருந்து குமரி மாவட்டம் வந்த புலம்பெயா் தொழிலாளா்கள் 75 போ் மருத்துவ பரிசோதனைக்குப் பின் தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

குவைத்திலிருந்து 16 போ், துபையிலிருந்து 14 போ் என தமிழகத்தைச் சோ்ந்த 30 போ் வியாழக்கிழமை இரவு விமானத்தில் திருவனந்தபுரம் வந்தனா். அவா்களை கேரள அதிகாரிகள் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதே போன்று தில்லியிலிருந்து ரயிலில் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் வந்த தமிழகத்தைச் சோ்ந்த 45 பேரையும் கேரள அதிகாரிகள் வாகனத்தில் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனா். இவா்களிடம் தமிழகத்துக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டு (இ பாஸ்) இல்லாததால் அவா்களை களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினா் தமிழக பகுதிக்குள் நுழைய அனுமதி மறுத்தனா்.

தொடா்ந்து அவா்கள் அப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டு, அவா்களிடமிருந்து சளி, ரத்தம் உள்ளிட்டவை பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. தொடா்ந்து அனைவரையும் வெள்ளிக்கிழமை நண்பகலில் கன்னியாகுமரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்த அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT