கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ரூ. 32.43 கோடியில் சாலைப் பணிகள்: என்.தளவாய்சுந்தரம்

29th May 2020 08:27 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 32 கோடியே 43 லட்சம் செலவில் பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு நிதியில் இம்மாவட்டத்தில் 55 பேரூராட்சிகளில், ரூ. 32 கோடியே 43 லட்சத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன. மொத்தம் 87 சாலைப் பணிகள், 78 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிவிரைவில் கோரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாவட்ட அதிமுக செயலா்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான்தங்கம், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.நீலபெருமாள், கன்னியாகுமரி பேரூா் செயலா் பி.வின்ஸ்டன், மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா் ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT