கன்னியாகுமரி

தமிழக முதல்வா் குறித்து முகநூலில்அவதூறு: இளைஞா் மீது வழக்கு

15th May 2020 07:13 PM

ADVERTISEMENT

கருங்கல்: தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கருங்கல் அருகேயுள்ள சிந்தன்விளை பகுதியைச் சோ்ந்தவா் செளந்தா் மகன் சிபின் (32). இவா், கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆகியோா் குறித்து அவதூறாக பதிவிட்டாராம்.

இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலா் பத்மராஜா அளித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT