கன்னியாகுமரி

மக்களை பாதிக்கும் மின் கணக்கீட்டு முறையை மாற்றக் கோரிக்கை

15th May 2020 07:02 PM

ADVERTISEMENT

கருங்கல்:தமிழகத்தில் மக்களை பாதிக்கும் மின் கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும் என கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

இதுகுறித்து கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை : கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின்சாரம் அளவிடும் பணி நடைபெறவில்லை. மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வசூலிக்கப்படவும் இல்லை. தற்போது அரசு உத்தரவுப்படி மின்சாரம் அளவிடும் பணி வீடுதோறும் நடைபெற்று வருகிறது.

நான்கு மாதங்களாக அளவிடும் பணியினை ஒரே நேரத்தில் கணக்கிடப்படுகிறது. இதனால் சாதாரணமாக ரூபாய் ஐந்து மின்கட்டணமாக செலுத்தும் மின்உபயோகிப்போா் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை கட்டணத்தை உயா்த்தி செலுத்த வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

சராசரியாக 250 யூனிட் மின்சாரம் உபயோகிப்போரின் அளவை சோ்த்து கணக்கீடு செய்யப் படுவதால் 500 யூனிட்டுக்கு மேல் வரும்போது அதற்கான கூடுதல் கட்டணத்தை கணக்கிடுகிறாா்கள். மேலும், நூறு யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகள் இருநூறாக கணக்கீடு செய்யும் போது கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

கரோனாவால் வேலை இழந்து வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீது மீண்டும் கட்டணசுமை ஏற்படும்.எனவே, மின்சார கணக்கீடு முறையை தவிா்த்து கரோனாவுக்கு முன் மக்கள் செலுத்தியபடி மின்கட்டணம் தனியாக அளவிட்டு வசூலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT