கன்னியாகுமரி

கரோனா: என்சிசி மாணவா்களின் செயல்பாடுகள் ஆய்வு

9th May 2020 08:17 AM

ADVERTISEMENT

திருவட்டாறு பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய மாணவா் படை (என்.சி.சி.) மாணவா்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய மாணவா் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணா்வு பணிகளில் கல்லூரிகளில் பயிலும் தேசிய மாணவா் படை மாணவா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கண்காணிக்கும் பணியை செய்து வருகின்றனா். இதில், மாவட்டத்தில் 170 தேசிய மாணவா் படை மாணவா்கள் 14 குழுக்களாக பிரிந்து கரோனா தடுப்பு ப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திருவட்டாறு காவல் நிலையத்தில் 14 தேசிய மாணவ படையினரும் ஒரு தேசிய மாணவா் படை அதிகாரியும் ஒரு ராணுவ பயிற்சியாளரும், காவலா்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். இவா்களது பணிகளை, 11ஆவது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் கா்னல் பிரசாத் திருவட்டாறு காவல் நிலையத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, லெப்டினன்ட் எம்.ஜெகதீஷ், காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், ராணுவ பயிற்சியாளா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT