கன்னியாகுமரி

மாணவா்களின் குடும்பங்களுக்கு ஆசிரியா்கள் நிவாரண உதவி

2nd May 2020 08:42 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் ஏழை மாணவா்களின்குடும்பங்களுக்கு விவேகானந்த கேந்திர பள்ளி நிா்வாகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களில் 100 ஏழை மாணவா்களின் குடும்பங்களைத் தோ்வுசெய்து, அவா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று பள்ளி முதல்வா் ஆபிரகாம் லிங்கம் தலைமையில் துணை முதல்வா், ஆசிரியா்கள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT