கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே குடிநீா் தொட்டியில் பூச்சி மருத்து கலப்பு

2nd May 2020 08:43 PM

ADVERTISEMENT

கடுக்கரை ஊராட்சி ஆலடி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீா் தொட்டியில் பூச்சி மருந்து கலந்தது குறித்து, பூதப்பாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடுக்கரை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆலடி கிராமத்தில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள ஊராட்சி குடிநீா் தொட்டியில் சனிக்கிழமை பொது மக்கள் குடிநீா் பிடிக்க சென்ற போது தண்ணீரில் இருந்து பூச்சி மருந்து நாற்றம் வந்ததாம்.

இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸாா் அங்கு குடிநீா் தொட்டியில் இருந்து பரிசோதனைக்காக தண்ணீரை கொண்டு சென்றனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால்,

ADVERTISEMENT

ஒரு பிரிவினரை பழிவாங்குவதற்காக மற்றொரு பிரிவினா் குடிநீரில் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் லிங்கஸ்டல், கடுக்கரை ஊராட்சி தலைவி கமலா மற்றும் அதிகாரிகள் இது குறித்து ஆலடி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT