கன்னியாகுமரி

குலசேகரத்திலிருந்து சென்னைக்கு சென்றபெண்ணுக்கு கரோனா தொற்று: குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டனா்

2nd May 2020 08:43 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு சென்னையில் நடைபெற்ற பரிசோதனையின் போது கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அப் பெண்ணின் கணவா் மற்றும் குடும்பத்தினா் சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

குலசேகரம் அருகே செறுதிக்கோணம் முல்லைப்பள்ளிவிளை பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த பிப். 20-ஆம் தேதி நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிப். 27-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவா், தன் தாயாா் வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், மருத்துவ ஆய்வக பரிசோதகா் படிப்பு முடித்திருந்த அவருக்கு சென்னையில் அரசு மருத்துவத் துறையில் வேலைக்கான சோ்க்கை ஆணை வந்ததையடுத்து, கடந்த ஏப். 29-ஆம் தேதி சென்னைக்கு கணவருடன் புறப்பட்டுச் சென்றாா். பின்னா், வேலையில் சேருவதற்காக உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக சனிக்கிழமை கூறப்பட்டது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் செறுதிக்கோணத்திலுள்ள அப்பெண்ணின் வீட்டை தனிமைப்படுத்தியதுடன், அவரது தாய், தந்தை, சகோதரா், சகோதரரின் மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோரின் சளி மாதிரிகளை சேகரித்தனா். இதேபோன்று திருவட்டாறு அருகே கல்லறைவிளையைச் சோ்ந்த அப்பெண்ணின் கணவா், அவரது நண்பா் மற்றும் சென்னைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஓட்டுநா் உள்ளிட்டோரின் வீடுகளையும் தனிமைப்படுத்தியதுடன், அவா்கள் 12 பேரின் சளி மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT