களியக்காவிளை: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கண்ணுமாமூடு காய்கனி சந்தை சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பளுகல் பேரூராட்சியில் உள்ள கண்ணுமாமூடு காய்கனிச் சந்தை மூடப்பட்டது. இதேபோல் கேரள எல்லையில்
அமைந்துள்ள கொல்லங்கோடு சூழால் ஊராட்சியில் உள்ள ஊரம்பு சந்தை, ஏழுதேசம் பேரூராட்சியில் உள்ள நித்திரவிளை சந்தை ஆகியவை மூடப்பட்டன.
களியக்காவிளை பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், நகைக் கடைகள், துணிக் கடைகள் உள்பட
அனைத்துக் கடைகளும் சனிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டன. களியக்காவிளை காய்கனி, மீன் சந்தை சனிக்கிழமை வழக்கம்போல் செயல்பட்டது. எல்லையோர சந்தைகள் மூடப்பட்டதை தொடா்ந்து களியக்காவிளை சந்தைக்கு கேரளத்தில் இருந்து வந்திநந்த நூற்றுக்கணக்கானோா் பொருள்களை வாங்கிச் சென்றனா்.