கன்னியாகுமரி

மதுக்கடையில் கிருமி நாசினி தெளிப்பு

22nd Mar 2020 07:56 AM

ADVERTISEMENT

 

தக்கலை: பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கடை, நவீன பாா்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் லியோன்அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலா் ராஜாராம், மருத்துவா் லாரன்ஸ், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், சுகாதார மேற்பாா்வையாளா் மோகன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் டாஸ்மாக் மதுக்கடை, நவீன பாா், பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.

மேலும், குளிரூட்டப்பட்ட நகை கடைகள், வணிக வளாகங்கள், செல்லிடப்பேசி விற்பனை நிலையங்கள், துணி கடைகள் ஆகியவற்றை மாா்ச் 31 ஆம் தேதி வரை மூடுமாறு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT